நாமக்கல் பள்ளியில் மது அருந்திய 4 மாணவிகள் அதிரடி நீக்கம். அதிர்ச்சி தகவல்

நாமக்கல் பள்ளியில் மது அருந்திய 4 மாணவிகள் அதிரடி நீக்கம். அதிர்ச்சி தகவல்

beerநாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கும் நான்கு மாணவிகள் வகுப்பறையில் பீர் குடித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 21ஆம் தேர்வு என அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவிகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் ப்ளஸ் 1 படக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் 7 மாணவிகள் மட்டும் தங்கள் தோழி ஒருவரின் பிறந்த நாளை கொண்டாட வகுப்பறையில் இருந்ததாகவும், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர்களின் நான்குபேர் பீர் அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியை உடனடியாக தலைமை ஆசிரியையிடம் புகார் கொடுத்துள்ளார். மது அருந்தி மயக்கமாக இருந்த 4 மாணவிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்கள் நால்வரும் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை நான்கு மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து டிசியை கொடுத்து அனுப்பியுள்ளார். மீதி மூன்று மாணவிகள் மது அருந்தாவிட்டாலும், மது அருந்திய மாணவிகளுடன் இருந்ததால் எச்சரிக்கை செய்யப்பட்டு மன்னிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ப்ளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு பீர் எப்படி கிடைத்தது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

Leave a Reply