நாட்டை விட்டு வெளியேறும் எண்ணமில்லை. அமீர்கான் திடீர் பல்டி

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணமில்லை. அமீர்கான் திடீர் பல்டி

amir khan desireஇந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேற தனது மனைவி ஆலோசன கூறியதாக சமீபத்தில் அமீர்கான் ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியனாக இருப்பதில் தான் பெருமை அடைவதாகவும் தனக்கோ, தனது மனைவிக்கோ நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமில்லை’ என்றும் நடிகர் அமீர்கான் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார்.

அமீர்கான் நாட்டை விட்டு வெளியேறும் கருத்தை முன்னதாக கூறியதால் அவரது மும்பை வீட்டிற்கு முன் இந்துமத ஆதரவாளர்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் அவர் மீது காவல்துறையில் புகாரும் செய்யப்பட்டது. மேலும் திரைப்படத்துறையில் அவருக்கு என்று இருந்து ஒரு இமேஜூம் இந்த பேச்சினால் நிலைகுலைந்தது. திரையுலகை சேர்ந்த பலர் அமீர்கானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அமீர்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதலில் எனக்கும், எனது மனைவிக்கும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமில்லை. எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், எனது பேட்டியை பார்த்திருக்கவே மாட்டார்கள். அந்தப் பேட்டியில் நான் தெரிவித்திருந்த கருத்துகளில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை தேசவிரோதி என்று அழைப்பவர்களிடம், “இந்தியன் என்பதில் நான் பெருமையடைகிறேன்’ என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்.

English Summary: Aamir Khan says neither he nor his wife have any intention of leaving the country

Leave a Reply