நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட். இந்திய அணி 215க்கு ஆல் அவுட்
நேற்று நாக்பூரில் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தபோதிலும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்து கொண்டே இருந்ததால் இந்திய அணி 78.2 ஓவர்களில் 215 ரன்களே எடுத்தது.
இதனை அடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த போது நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. எல்கர் 7 ரன்களுடனும், ஆம்லா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
English Summary : Nagpur Cricket test: India 215/10 and South Africa 11/2