மென்மையான சருமம் வேண்டுமா?

223d04ae-4a3b-4393-934b-7de858e5794c_S_secvpf

அனைவருக்குமே அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். சிலருக்கு இயற்கையாகவே சருமம் மென்மையாக இருக்கும். ஒருசிலருக்கு சருமம் கடினமாக இருக்கும். இவ்வாறு கடினமாக இருக்கும் சருமத்தை இயற்கையான முறையில் மென்மையாக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

• தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

• வியர்வை வெளியேறுவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் வியர்வையின் வெளியேறும் போது சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களை அனைத்தும் வெளியேறி, சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, வியர்வையை வெளியேற்ற வேண்டும்.

• முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால், சருமம் வறட்சியுடன் காணப்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறை கழுவினால் போதுமானது. வெறும் தண்ணீரால் தினமும் 4 முதல் 5 முறை கழுவலாம்.

• சருமத்தில் தங்கியுள்ள இறந்தை செல்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற, ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும மென்மைக்கு தடையாக இருக்கும், அந்த அழுக்கு படலத்தை முற்றிலும் வெளியேற்ற முடியும். ஸ்கரப் செய்ய பின்னர், ரோஸ் வாட்டர் கொண்டு சருமத்தை துடைத்தால், சருமத்துளைகள் சிறிதாகி, அழுக்குகள் உள்ளே புகாதவாறு தடுக்கும்.

• ஆவிப்பிடிப்பதால், சருமத்துளைகள் தளர்வடைந்து, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் மென்மையாகும்.

Leave a Reply