அமீர்கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் ரூ.1 லட்சம். சிவசேனா பகீர் அறிவிப்பு

அமீர்கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் ரூ.1 லட்சம். சிவசேனா பகீர் அறிவிப்பு
amirkhan
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது நாட்டில் மத சகிப்புத்தன்மையின்மை காரணமாக இந்தியாவைவிட்டு வெளியேறி விடலாமா? என தனது மனைவி கேட்டதாக கூறினார். இதற்கு பாஜக தரப்பில் இருந்தும், சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என அமீர்கான் மீண்டும் மீண்டும் கூறியபோதிலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் குறையவில்லை. இந்நிலையில் சிவசேனாவின் பஞ்சாப் மாநில தலைவர் அமீர்கான் கன்னத்தில் அறைந்தால் ஒரு லட்ச ரூபாம் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமீர்கான் தற்போது ‘டங்கல்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரில் உள்ளார். அவர் தங்கியிருக்கும் ‘ப்ளூ என்ற ஓட்டலின் முன் நேற்று குவிந்த சிவசேனா கட்சியினர், அமீர்கானை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது புகைப்படத்தைக் கொளுத்தினர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில சிவ சேனா கட்சியின் தலைவர் ராஜீன் தன்டன், நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது ”இந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களுக்கும், மேலாளருக்கும், அமீர் கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள், அமீர் கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்றார் பகிரங்கமாக.

இதையடுத்து அமீர்கான், ”எனக்கு எதிராக செயல்படுபவர்கள், நான் கூறிய கருத்தையே மெய்ப்பிக்கின்றனர்” என்று கூறி உள்ளார்.

English Summary: Shiv sena announces Rupees one lakh per slap for slaping Amir khan for expressing his views

Leave a Reply