மதுரை கிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை என்ன சொல்கிறது.

மதுரை கிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை என்ன சொல்கிறது.

sagayamமதுரை கிரானைட் முறைகேடு குறித்து கடந்த சில மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அவருடைய அறிக்கையின் மூலம் ரூ.1.06 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மதுரை கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி கடந்த சில மாதங்களுக்கு விசாரணையை தொடங்கினார் சகாயம் ஐ.ஏ.எஸ். அவருக்கு பலவிதமான பயமுறுத்தல்கள், இன்னல்கள் ஆகியவை குறுக்கிட்டபோது, நேர்மையாக அதே நேரத்தில் உறுதியாக விசாரணை மேற்கொண்ட சகாயம் குழு, தங்களது விசாரணை அறிக்கையை கடந்த 23-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், கிரானைட் கற்கள் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பரிசீலனை முதல் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பது வரை பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டால் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வருவாய் இழப்பு கணக்கிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள கிரானைட் கற்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யவும், கிரானைட் முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அல்லது சி.பி.ஐ. விசாரணை செய்யவும், இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கவும் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

English Summary: Granite Scam: Sagayam IAS Submits Final Report – Citing Involvement Of Officers And Ministers 

Leave a Reply