முதன்முதலாக அமெரிக்காவில் டிரெண்டான தமிழ்ப்படம் ‘தெறி’
ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு ஆகியவற்றின்போது டுவிட்டரில் சென்னை அளவில், தமிழ்நாடு அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆவது சகஜம்தான். ஒருசில நேரங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆவதும் உண்டு.
ஆனால் நேற்று வெளியான ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமெரிக்க அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. கோலிவுட் திரைப்பட வரலாற்றில் தமிழ்ப்படம் ஒன்று அமெரிக்க நாட்டின் டிரெண்ட்டில் வந்தது இதுதான் முறை என்று கூறப்படுகிறது.
இளையதளபதி விஜய்யின் மாஸ், உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் டிரெண்ட் ஆனது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.