அமீர்கானை அறையும் அறிவிப்பு. மும்பை சிவசேனா-பஞ்சாப் சிவசேனா மோதல்?

அமீர்கானை அறையும் அறிவிப்பு. மும்பை சிவசேனா-பஞ்சாப் சிவசேனா மோதல்?
sivasena
இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை இந்து அமைப்புகள் மற்றும் சிவசேனா கட்சி நடத்தி வரும் நிலையில் பஞ்சாப் சிவசேனா தலைவர், ‘அமீர்கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் ரூ.1 லட்சம் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கும் நிலையில், பஞ்சாப் சிவசேனாவுக்கு மும்பை சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மும்பையில் இன்று சிவசேனா கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் “அமீர் கானை கன்னத்தில் அறைந்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில சிவசேனா கட்சியினர் அறிவித்ததற்கும், கட்சியின்  தலைவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற தவறான கருத்துகளை சிவசேனா ஒருபோதும் ஆதரிக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சாப் சிவசேனா தலைவர் ராஜீவ் டாண்டனைமும்பையில் உள்ள கட்சியின் தலைமை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply