ராஜ்தாக்கரே கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம். சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் சிவசேனா நேற்று அறிவித்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரேயை கன்னத்தில் அறைந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்போவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் தவ்பீக் இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமீர்கானை அறைபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு என்று சிவசேனா அறிவித்துள்ளது. வன்முறையைத் தூண்டும் சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரேயை பொது இடத்தில் கன்னத்தில் அறைபவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இரண்டு லட்சம் ரூபாய் பரிசளிக்கத்தயார்.
இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு, முஸ்லிம் சமுதாயம் இனி அஞ்சாது. எல்லா வகையிலும் மதவெறியர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தயங்காது என்று எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.