ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பாகிஸ்தான் வசம் தான் இருக்கும். பாரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பாகிஸ்தான் வசம் தான் இருக்கும். பாரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு
farooq
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்னர், காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறப்படும் இந்த பகுதியை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்து வரும் நிலையில், ‘ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பாகிஸ்தான் வசம் தான் இருக்கும். அது இந்தியாவில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை’ என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பாரூக் அப்துல்லா, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ”பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பாகிஸ்தானுடனேயே இருக்கும். இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் இருக்கும். இதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை மட்டுமே வழி, போர் எந்த ஒரு சுமூக தீர்வையையும் கொடுக்காது” என்று கூறினார்.

பாரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதே பாரூக் அப்துல்லா கடந்த 2010ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பேசியபோது, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாகவும், ஐந்து ஆண்டுகளில் அவரது மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்றும் மத்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English Summary; Pakistan Occupied Kashmir Will Remain With Pakistan: Farooq Abdullah

Leave a Reply