கருணாநிதியை பின்னுக்கு தள்ளிய ஸ்டாலின். அதிர்ச்சி சர்வே முடிவுகள்

கருணாநிதியை பின்னுக்கு தள்ளிய ஸ்டாலின். அதிர்ச்சி சர்வே முடிவுகள்
dmk
பிரபல அரசியல் பத்திரிகை ஜூனியர் விகடன் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியானவர் யார்? என்பது குறித்து எடுத்த கருத்துக்கணிப்பில் திமுகவில் மு.கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் தி.மு.க.வில் கருணாநிதியா, மு.க.ஸ்டாலினா, அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வமா, சசிகலாவா என்று ஜூனியர் விகடன் நடத்திய சர்வேவின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த சர்வேயில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டானின் என 60.60% பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் அண்ணாவின் மறைவிற்கு பின்னர் திமுகவின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கருணாநிதிக்கு 39.40% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வியே எழவில்லை. ஒன் மேன் ஆர்மியாக இருக்கும் ஜெயலலிதாவை தவிர கட்சியினரும் சரி, பொதுமக்களும் சரி வேறு யாரையும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இருப்பினும் ஜெயலலிதாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் யார்? என்பது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு 54.35% பேர்களும் சசிகலாவுக்கு 7.25% பேர்களும் வாக்களித்துள்ளனர்.

English Summary: Who is the CM candidate of DMK? Survey result

Leave a Reply