தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை, வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் திரையுலகை சேர்ந்த சந்தானம், விஷால், சரத்குமார், சிவகார்த்திகேயன் உள்பட பலர் நிவாரண உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.