ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி:கோவா அணி அரையிறுதிக்கு தகுதி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி:கோவா அணி அரையிறுதிக்கு தகுதி

footballகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கேரளா அணியை 5-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய கோவா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த அணி 22 புள்ளிகள் எடுத்துள்ளது.

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் 8 அணிகளுக்கும் 14 லீக் ஆட்டம் உள்ளது. ‘லீக்’ போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா, டெல்லி டைனமோஸ் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு நுழைந்து விட்ட நிலையில் தற்போது கோவா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply