வெள்ள நிவாரத்திற்காக சோனா ஆரம்பித்த ‘ரைஸ் பவுல் சேலஞ்ச்’
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு பக்கெட் ஐஸ் கட்டியை தலையில் பிரபலங்கள் கொட்டிய வீடியோக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணையதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது இதே பாணியில் கவர்ச்சி நடிகையும் ‘கனிமொழி’ படத்தின் தயாரிப்பாளருமான சோனா ‘ரைஸ் பவுல் சேலஞ்ச் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்ந்த மழையால் பெரும்பாலான மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் பல நடிகர்கள் பணமாக நடிகர் சங்கத்திடம் கொடுத்து வரும் நிலையில் வித்தியாசமாக நடிகை சோனா, ‘ரைஸ் பவுல் சேலஞ்ச்’ஐ ஆரம்பித்துள்ளார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிலோ அரிசியை சேகரித்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் இவரது திட்டமாம். சோனாவின் ரைஸ் பவுல் சேலஞ்ச் ஆரம்பித்த சில மணிநேரங்களில் 175 கிலோ அரிசி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 1500 கிலோ அரிசி சேகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
English Summary: Heiden Sona has started ‘Rice Bowl Challenge’ to help people affected by rains in TN