அளவோடு குறைக்கணும் எடையை

tips_2639060f-350x250

# சிலர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஆறே வாரத்தில் ஆறு கிலோ, ஏழே வாரத்தில் எட்டு கிலோ போன்ற விபரீத முடிவுகளில் இறங்கிவிடுவார்கள். இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. எடையை ஒரே சீராகத்தான் குறைக்க வேண்டும். இப்படி திடீரென்று குறைகிற எடை, திடீரென அதிகரிக்கவும் செய்யும். ஒருவரின் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதுதான் சரியாக விகிதம்.

# கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் போன்றவற்றுடன் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடலாம். கொழுப்பு நிறைந்த உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

# உடல் எடையைக் குறைக்க நினைக்கிறவர்கள் சர்க்கரை, இனிப்பு வகைகள், பிஸ்கட், கேக், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், வெண்ணெய், நெய், பாலாடை, ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றுக்குப் பதில் கைக்குத்தல் அரிசி, காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தவிடு எடுக்காத கோதுமை மாவு, கொட்டை வகைகள் ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடலாம்.

# முதலில் உணவை நெறிப்படுத்திக் கொண்டு பிறகு உடற்பயிற்சியில் இறங்கலாம். எடை குறைய வேண்டுமே தவிர தசைகளைக் குறைக்கக் கூடாது. தசைகளைக் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கத்தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி சீராக இல்லையென்றால் குறைந்த எடை மீண்டும் கூடிவிடும்.

# சுறுசுறுப்பாக நடப்பது, மிதமாக ஓடுவது, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இவற்றைச் செய்வதால் இதயம் தன்னிலை மாறாமல் உடலுக்கு அதிக ரத்தத்தைப் பாய்ச்சுகிறது. தசைகள் மேலும் வலுவடையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க இதுபோன்ற உடற்பயிற்சிகள் உதவும்.

Leave a Reply