பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார்

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார்

mam ramasamyபிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

86 வயதான எம்.ஏ.எம்.ராமசாமி கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு குடும்ப மருத்துவர் ஜெயச்சந்திரன் சிகிச்சை அளித்து வந்தார். இதனிடையே, எம்.ஏ.எம்.ராமசாமிக்கு ஆசனவாய் பகுதி யில் இருந்த கட்டி ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு கண் அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டது.

சில நாட்களுக்கு முன் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எம்.ஏ.எம். ராமசாமி கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

Leave a Reply