தமிழக மழை வெள்ளத்துக்கு பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்துக்கு 20 லாரிகளில் உணவுப்பொருட்களை அனுப்புகிறது மத்திய அரசு. மத்திய உணவுப்பதப் படுத்துதல் தொழிற்சாலைகள் துறைக்கு அமைச்சரவை செயலர் உத்தரவு.
பெட்ரோலியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அமைச்சரவை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதே போல் அரக்கோணத்திலிருந்து பயணிகள் விமான சேவையைத் தொடரவும் அமைச்சரவை செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் விரைவில் வங்கிச் சேவையை சீரமைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.