தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ள பாதிப்பிற்கு காரணம். இஸ்ரோ விஞ்ஞானி குற்றச்சாட்டு

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே வெள்ள பாதிப்பிற்கு காரணம். இஸ்ரோ விஞ்ஞானி குற்றச்சாட்டு
chennai
செயற்கைக்கோள் மூலம் எங்கெங்கே மழை பெய்யும் என்ற தகவல்கள் முன்னரே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தும், அரசு இதை கவனத்துடன் கையாளாததால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி சிவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இஸ்ரோ விஞ்ஞானியும், தும்பா விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனருமான சிவன், செய்தியாளர்களிடம் பேசியபோது ”சென்னையில் மழை வெள்ளத்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டதற்கு அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம். எங்கே மழை பெய்யும், காற்றழுத்த தாழ்வு நிலை எப்போது சென்னையை கடக்கும் என்பது போன்ற விவரங்கள் செயற்கைக்கோள் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தமிழக அரசு இதனை கவனத்துடன் கையாளவில்லை. மழை பெய்வதற்கு முன்னரே ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளை காலி செய்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்திருந்தால், இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

English Summary: TN Government not precaution is the only reason for flood damages said ISRO scientists

Leave a Reply