வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை. 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை. 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
chennai1
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு திண்டாடி வரும் நிலையில் மீண்டும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள், அணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை நிரம்பி வழிவதால் இனிமேல் பெய்யும்  மழையினால் வரும் நீர் கண்டிப்பாக ஊருக்குள்தான் வரும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு  மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வட கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது..

சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

English Summar: Chance of rain two more days at seashore cities

Leave a Reply