ஆற்றில் மிதந்து வந்த லட்சக்கணக்கான யூரோ கரன்ஸி நோட்டுக்கள். ஆஸ்திரியாவில் பரபரப்பு
[carousel ids=”77797,77798,77799,77800″]
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் உள்ள தனூப் என்ற வற்றாத நதியில் சுமார் 1 லட்சம் யூரோக்கள் கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வரும் கரன்ஸி நோட்டுக்களைக் கண்ட இருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்ததாகவும் ஆனால் அவர்கள் எடுத்த கரன்ஸிகளை ஆஸ்திரிய போலீஸார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யூரோ நோட்டுக்கள் பாதுகாப்பான இடத்தில் காயவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து இன்னமும் மர்மம் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணத்தை தங்களுடையது என உரிமைகோரி பலர் காவல்துறையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதாகவும், ஆனால் காவல்துறையோ இந்த பணம் குற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
English Summary: Austria Boy Finds Euro Banknotes in River Danube in Vienna