தேர்தலுக்காக வெள்ள நிவாரண நிதியா? கருணாநிதி அச்சத்தின் காரணம் என்ன?
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தமிழக மக்கள் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கொடுத்த நிதியின் மூலம் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. ஆனால் இந்த நிவாரண உதவியை அரசியலாக்கும் வகையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பேரிடர் ஏற்பட்டு அரசும், தமிழக மக்களும் இக்கட்டான நிலையில் இருக்கும்போது அரசுக்கு ஆதரவாகவும், பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் நிவாரண உதவியை குறை கூறி வருகின்றனர்.
குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது, ‘வெள்ள நிவாரண உதவி என்ற பெயரில், அரசின் இந்த உதவித் தொகையை அ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக பயன்படுத்துவார்கள்’ என்று தனது அச்சத்தை தெரிவித்து உள்ளார்.
இதுபோன்ற நேரங்களில் கருணாநிதி போன்ற தலைவர்கள் அமைதியாக இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary: What is the reason for Karunanidhi’s fear?