கருவளையத்தை போக்கும் தேன்

daa45cec-2d81-4f3a-a3d9-22149b89a361_S_secvpf

கண்களின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. அந்த கருவளையங்கள் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாததால் வரும். அப்படி வரும் கருவளையங்களைப் போக்க மருத்துவ குணம் நிறைந்த தேனைக் கொண்டும் போக்கலாம். தேனைக் கொண்டு கருவளையங்களை எப்படிப் போக்குவது என்று பார்க்கலாம்.

* தேனை தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருவளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.

* 1:2 என்ற விகிதத்தில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து, அதனைக் கொண்டு, தினமும் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தில் மீது தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்நது செய்து வந்தால், உங்கள் கண்கள் கவர்ச்சிகரமாக மாறுவதை காணலாம்.

* பாதாம் எண்ணெய்க்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அத்தகைய பாதாம் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் தேனில் 4 துளிகள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் விரைவில் அகலும்.

– இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி கருவளையத்தை போக்கலாம். எப்படி இருந்தாலும் தினமும் 8 மணிநேரம் தூக்கம் மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது.

Leave a Reply