கருப்புப்பணம் கடத்தும் நாடுகளின் பட்டியல். இந்தியாவுக்கு எந்த இடம்?

கருப்புப்பணம் கடத்தும் நாடுகளின் பட்டியல். இந்தியாவுக்கு எந்த இடம்?
black money
கள்ளத்தனமாக கருப்பு பணத்தை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடத்தும் நாடுகள் குறித்த பட்டியல் ஒன்றை அமெரிக்காவில் உள்ள உலகளாவிய நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

கடந்த 2013-14 நிதியாண்டில் உலகம் முழுவதிலும் 1.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கருப்புப் பணம் வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயக்கப்பட்டதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கருப்பு பணத்தை பரிமாற்றும் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 139 பில்லியன் டாலர்கள் கருப்புப் பணம் இடம்பெயர்வதாகவும், சீனாவை அடுத்து ரஷ்யாவில் இருந்து 104 பில்லியன் டாலர்கள் இடம்பெறுவதாகவும், மூன்றாவது இடத்தில் உள்ள மெக்சிகன் நாட்டில் இருந்து 52.8 பில்லியன் டாலர்கள் கருப்புப் பணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 51 பில்லியன் டாலர்களை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

English Summary: India ranks 4th in black money outflows per annum:

Leave a Reply