வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கருணாநிதி

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கருணாநிதி

karunanihdiசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குவேன் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று கூறிய நிலையில் இன்று நேரில் நிவாரணம் வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் கூறினார்.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால், லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர், திரையுலகினர், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் ஹெலிகாப்டரில் சென்று பார்த்து வந்தபோதிலும், திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதாவை மட்டுமே விமர்சனம் செய்தார். வானத்தில் இருந்து ஆறுதல் சொல்லும் வழக்கம் தனக்கு இல்லை என்றும் சாலை வழியாக நேரில் சென்று ஆறுதல் கூறுவேன் என்றும் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று திமுக தலைவர் கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நெடுஞ்செழியன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கருணாநிதி சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை புறப்பட்டு சென்றார் கருணாநிதி. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்குகிறார்.
 

Leave a Reply