மத்திய அரசின் தங்க முதலீடு திட்டத்தில் 160 கிலோ முதலீடு செய்த மும்பை சித்தி விநாயகர் கோவில்

மத்திய அரசின் தங்க முதலீடு திட்டத்தில் 160 கிலோ முதலீடு செய்த மும்பை சித்தி விநாயகர் கோவில்
temple
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தங்க முதலீடு திட்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. சிறிய அளவிலேயே இந்த திட்டத்தில் தங்கம் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் 160 கிலோ தங்கத்தை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

மும்பை சித்தி விநாயகர் கோவிலின் நிர்வாக அதிகாரி சஞ்சீவ் பட்டேல் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது ‘கோவிலுக்கு காணிக்கையாக வந்துள்ள 40கிலோ தங்க நகைகளை உருக்கும் பணி நடைபெற்று வருவதாவும் இந்த பணி முடிந்தவுடன் இம்மாத இறுதியில் 160 கிலோ தங்கக்கட்டிகள் பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் முதலீடு செய்யப்படும்’ என்றும் கூறியுள்ளார்.,

டன் கணக்கில் தங்கம் இருப்பு வைத்துள்ள திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வந்த நிலையில் மும்பை சித்தி வினாயகர் கோவில் நிர்வாகத்தின் முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

English Summary:Siddhivinayak temple plans to deposit 160 kg gold in govt’s gold scheme

Leave a Reply