சென்னை வெள்ளம்: டிசம்பர் 24 வரை ரயில்வே துறை அறிவித்துள்ள முக்கிய சலுகை.

சென்னை வெள்ளம்: டிசம்பர் 24 வரை ரயில்வே துறை அறிவித்துள்ள முக்கிய சலுகை.
indian-Railways
இந்தியன் ரயில்வே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்பதிவு செய்து பயணம் செய்யும் ரயில் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் பரிசோதகர்களிடம் தங்கள் ஒரிஜினல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பலர் தங்கள் ஒரிஜினல் ஆவணங்களை வெள்ளத்தில் இழந்திருப்பதால் அடையாள அட்டையின்றி முன்பதிவு செய்தவர்கள் வரும் 24ஆம் தேதி வரை ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே முதன்மை வர்த்த மேலாளர் அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”சென்னையில் அண்மையில் பெய்த மழையால் பெரும்பாலான மக்களின் அசல் அடையாள அட்டைகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் அசல் அடையாள அட்டையை காண்பிக்கமாறு டிசம்பர் 22-ம் தேதி வரை வலியுறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இரயில்வே துறையின் இந்த அறிவிப்பு காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தொலைந்து போன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக நகல் ஆவணங்கள் வாங்க இரண்டு வார காலம் ஆகும் என்பதால் டிசம்பர் 24 வரை இந்த சலுகையை ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

English Summary: Original record is not required during train journey till December 24.

Leave a Reply