பழைய போன்களே சிறப்பு

cell-phones1எல்லாமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலும் சிலருக்கு கவுரவம். ஆனால் தற்போதைய ஸ்மார்ட்போன்களை விட, பத்தாண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பழைய போன்களே சிறப்பானது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிக்னல்கள் கிடைப்பதில் ஸ்மார்ட்போன்களை விட சாதாரண போன்கள் 7 மடங்கு கூடுதல் செயல் திறன் கொண்டதாம்.

கிளாஸ், உலோகங்கள் மற்றும் மெலிதான மேற்புறம் போன்றவை காரணமாக ஸ்மார்ட்போன்கள் சிக்னல்களை பெறுவதில் குறைவான செயல்பாடு கொண்டுள்ளது என்கிறது அந்த ஆய்வு. பிளாஸ்டிக் மேற்புறம் இருந்த பழைய நோக்கியா போன்களில் இந்த சிக்கல்கள் இல்லையாம். அதுபோல பேட்டரிகளின் பயன்பாட்டிலும் பழைய போன்களே சிறப்பாக இருந்தது என்கிறது அந்த ஆய்வு.

Leave a Reply