‘டெங்கு’ காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து பிரான்ஸ் நிறுவனம் சாதனை

 ‘டெங்கு’ காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்து பிரான்ஸ் நிறுவனம் சாதனை
dengu
உலகையே அச்சுறுத்தி வந்த டெங்கு காய்ச்சலை குணப்படுத்த  இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தற்போது பிரான்ஸ் மருந்து நிறுவனம் ஒன்று இந்த நோய்க்கான மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்துக்கு மெக்சிகோ நாடு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த மருந்து விரைவில் உலகமெங்கும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

வருடம் ஒன்றுக்கு சுமார் 20ஆயிரத்திற்கும் மேல் டெங்கு காய்ச்சலால் மக்கள் பலியாகி வந்த நிலையில்  ‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை தற்போது கண்டுபிடித்துள்ளது.

மெக்சிகோவில்  9 முதல் 45 வயதுடைய சுமார் 40,000 பேர்களுக்கு இந்த மருந்து சோதித்து பார்க்கப்பட்டதில் திருப்தியான ரிசல்ட் கிடைத்ததை அடுத்து அந்நாடு இந்த மருந்துக்கு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.  விரைவில் இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மருந்து குறித்து ‘ஸனோஃபி’ மருந்து நிறுவனத்தின் ஆய்வியல் துறைத் தலைவர் ஒலிவியர் சர்மேய்ல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெங்கு மிகவும் ஆபத்தான ஒரு நோய். சமூக சுகாதாரத்திற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் டெங்கு பெரும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 160 கோடி யூரோக்களுக்கும் மேல் செலவழித்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம்; இது மகத்தான கண்டுபிடிப்பு; பல கோடி மக்கள் இதனால் டெங்குவின்
பிடியிலிருந்து காப்பற்றப்படுவர்” என்று தெரிவித்தார்.

Leave a Reply