மூட்டுப் பிரச்சனைகள் வராமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்

Knee-Pain-350x250

மனித உடல் என்பது 206 எலும்புகளால் ஆன மிகவும் சிக்கலான ஓர் அமைப்பு. நம் உடலின் சில பகுதிகளில் இரண்டிற்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இவைகளைத் தான் மூட்டுகள் என்று சொல்லப்படுகிறது. இந்த மூட்டுகள் உள்ள பகுதியைத் தான் நம்மால் வளைக்கவோ, சுழற்றவோ முடியும்.

பொதுவாக மூட்டுப் பிரச்சனைகள் வயதான காலத்தில் தான் ஏற்படும். ஆனால் தற்போது பலருக்கும் விரைவில் மூட்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இதற்கு நமது பழக்கவழக்கங்கள் தான் காரணம். நம் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் பலருக்கும் மூட்டு வலிகள், மூட்டுகளில் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் அமர்வது
வேலை செய்யும் போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, மூட்டுகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும். எனவே அடிக்கடி எழுந்து சிறிது தூரம் நடக்க முயலுங்கள். இதனால் மூட்டு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான நிலையில் இருங்கள்
உட்காரும் போது, நடக்கும் போது அல்லது ஓடும் போது சரியான நிலையில் இருங்கள். இப்படி எப்போதும் சரியான நிலையில் இருந்தால், உங்கள் மூட்டுகள் ஆரோக்கியமாக எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

உடலை வருத்தாதீர்கள்
அழுத்தம் மற்றும் கஷ்டம் இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே உடலுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் செயல்களைச் செய்ய வேண்டாம். குறிப்பாக மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் செயல்களான மிகவும் எடையுள்ள பொருட்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள். உதாரணமாக, இதனால் உங்களுக்கு மூட்டு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

 

நல்ல ஓய்வு எடுங்கள்
ஓய்வு எடுக்கும் போது, உடல் மற்றும் உளவியல் ரீதியாக நன்கு ஓய்வெடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், மறைமுகமாக இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை அதிகரித்து, பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

நல்ல டயட்
வெறும் பழக்கவழக்கங்கள் மட்டும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்காது. மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளையும் உட்கொண்டு வர வேண்டும். குறிப்பாக கால்சியம், நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதன் மூலம், எலும்புகளின் வலிமையை அதிகரித்து, மூட்டுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி
உடலுக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் மட்டும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்காது. தினமும் சிறிது தூரமாவது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக காலை வேளையில் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், அதிகாலையில் வீசும் காற்றினால், முகத்தில் உள்ள எலும்புகள் புத்துயிர் பெறும்.

தசைகள்
மூட்டுகள் உள்ள பகுதிகளில் சிறிது தசைகள் இருந்தால் தான், மூட்டுகளில் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். எனவே மூட்டுப் பகுதியில் சிறிது தசைகள் வளர்வதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

வயதிற்கு ஏற்ற வாழ்க்கை வாழுங்கள்
இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் வயதிற்கு ஏற்ற வேலையை மட்டும் செய்து வாழ்ந்து வாருங்கள். அதைவிட்டு, என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று, கடுமையான வேலைகளை செய்து வந்தால், அதன் மூலம் மூட்டுகள் தான் கடுமையாக பாதிக்கப்படும். 

Leave a Reply