வெள்ளை கொண்டைக்கடலை – 100 கிராம்
மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
தனியாதூள் – 3 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
தேங்காய் துருவல் – 100 கிராம்)
அரைக்க :
கொத்தமல்லித்தழை – சிறிது
தக்காளி – 1
தாளிக்க :
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு -1
வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* கொண்டக்கடலையை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
* தக்காளி, கொத்தமல்லித்தழை இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* தேங்காய் துருவலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுத்தது அதே தேங்காயுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால், அவித்து வைத்துள்ள சென்னா, மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
* மசாலாவாடை போனதும் முதல் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.