கார்த்திகை மாத பௌர்ணமி போலவே கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு பெறுகிறது. இதுவே திங்கள் கிழமை தோன்றினால் இன்னும் விசேஷம்.
இந்நாளில் அரசமரத்தை வலம் வந்து வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் சந்தான பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்நாளில் காலை 6 மணியளவில் நீராடி விட்டு அரசமரத்தினடியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை செய்து புது வஸ்திரம் சாற்றி, அம்மரத்தினை 108 முறை வலம் வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அவ்வாறு வலம் வரும் வேளையில் அரசமரத்திற்குரிய ஸ்லோகமா (அ) ஓம் நமசிவாய (அ) ஓம் நமோ நாராயணாய மந்திரத்தை துதிக்கவேண்டும்.
அரசமரம் மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழ்கிறது. அதனை உணர்த்தும் ஸ்லோகம் பின்வருமாறு :
மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே |
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம |
(அரசமரத்தின் வேர்ப்பாகம் படைக்கும் கடவுளான பிரம்மாவகவும், நடுவே உள்ள தண்டுபகுதி காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், மேலுள்ள கிளைகள், இலைகள் உள்ள மேற்பகுதி அழிக்கும் கடவுளான சிவபெருமானாகவும் கருதப்படுகிறது. வ்ருக்ஷம் என்றால் மரம், ராஜா என்றால் அரசன். அதனால்தான் மரங்களுக்கு ராஜா என்று குறிப்பிடபடும் இந்த மரத்தை வேதம் அரசமரம் என வர்ணிக்கிறது)
விஞ்ஞான தகவல்கள் :
மருத்துவ ரீதியாக ஒரு சில பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பபை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாலும், கர்ப்பத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி ஒரு சில பெண்களுக்கு இல்லாததாலும் அவர்கள் முற்கூறிய முறையில் வழிபாடு செய்தால் அவர்களுக்கு கர்ப்பப்பை பலம் பெற்று புத்திர சந்தானம் இயற்கையாகவே கிடைக்கும்.
மேலும், புத்திர சந்தானம் இல்லாத ஆண்கள் இந்த மரத்தை வலம் வரும் போது அவர்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும். புத்திர சந்தானம் கிடைக்கும்.
குறிப்பு :
இந்த பூஜைக்கு செல்லும் போது செல்போன்களை வீட்டிலேயே வைத்து விட்டு செல்வது பயன்கள் சீக்கிரம் கிடைக்க உதவும்.