ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க

8f18bce2-c960-414c-a692-72253ab03273_S_secvpf

சாத்துக்குடி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தத்திற்கு நன்மை விளைவிக்கும் பழமாகும். மேலும் சாத்துக்குடி பசியை ஏற்படுத்தக் கூடியது, வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும். மற்றும் இது செரிமானத்தை சரி செய்ய கூடியது.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், ஒரு மாதத்தில் நல்ல தீர்வுக் காண முடியும்.

சிலருக்கு மிகவும் எலும்பு வலுவிழந்து இருக்கும். சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், எலும்பு வலுவடையும். மலச்சிக்கல் அனைவரின் பெரும் சிக்கலாகும், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும், அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், இந்த தேய்மானத்தின் அளவை குறைக்க முடியும்.

Leave a Reply