1. வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் (antioxidant) இது உயிரணுக்களை (cells) பாதுகாக்கிறது. போதுமான அளவு வைட்டமின் ஈ கிடைக்கவில்லை என்றால் மற்ற சத்துக்களை உடலுக்கு உறுஞ்சுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
2, பொட்டாசியம் :
பொட்டாசியம் ஒரு மின்பகுபொருள் (எலக்ட்ரோலைட் – electrolyte ). இது நமது நரம்பு மண்டலம் முனைப்பாக செயல்படவும், தசைககளை நயமாக(muscles tone) வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகிறது. போதுமான பொட்டாசியம் கிடைக்கவில்லை என்றால், எளிதில் களைப்படைவதாக உணர்வோம். இதை தவிர்க்க, நாம் போதுமான அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மற்றும் அளவான சோடியம் உண்ண வேண்டும். தினமும் எந்தெந்த வகைகளில் பொட்டாசியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்: 1 நடுத்தர வேகவைத்த தோல் நீக்காத உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடலாம். 1 கப் சமைத்த பயறு, பருப்பு சூப் (அ)கூட்டு செய்து சாப்பிடலாம். 1 கப் நறுக்கிய வாழைப்பழம்.
3 கால்சியம் :
கால்சியம் என்கின்ற கனிமம் வலிமை மிக்க வலுவான எலும்புகள் உருவாக உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது. கால்சியம் மற்றும் சில முக்கிய நோய்களை தடுக்க உதவிசெய்கிறது.
4. வைட்டமின் எ :
இந்த ஊட்டச்சத்து கண்பார்வை, குறிப்பாக இரவு நேர பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. வயது ஏற ஏற புலனுணர்வு செயல்பாட்டை பாதுகாக்க அதிக வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.
5. மக்னீஷியம் :
மெக்னீசியம் உடலில் நடக்கும் நூற்றுக்கணக்கான இரசாயன மாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணுக்கள் சரியாக (helping your genes function properly) வேலை செய்ய ஆற்றலை சேமித்து (storing energy) கொடுத்து உதவுகிறது, இது எலும்புகள் வலிமையுடன் இருக்க , நரம்புகள் மற்றும் தசைகள் தொய்வில்லாமல் நயத்துடன் பராமரிக்க மற்றும் ரத்தம் தடையில்லாமல் சீராக உடல் முழுவதும் பாய உதவுகிறது. இந்த தாது, பரிந்துரைக்கப்பட்ட 38% கிடைக்கப்பெற்றால் வளர் சிதை மாற்ற நோய் அறிகுறி (metabolic syndrome) தவிர்க்கப்படுவதை சிடிசி ஆய்வு அறிக்கை கண்டுபிடித்துள்ளது. மேலும் அதிக வயிற்றுக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் கட்டுக்குள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.