நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

ebaedb0e-945c-4b5f-8e7e-68752d32b808_S_secvpf

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் – அரைக் கிலோ
புளி – இரண்டு எலுமிச்சை அளவு
கடுகு – சிறிதளவு
வெங்காயம் – மூன்று

தக்காளி – மூன்று
பச்சை மிளகாய் – ஆறு
வெந்தயம் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூ‌ன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
கொத்துமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :

* மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.

* புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும்.

* இ‌‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌க்கு‌ம் போது அதனுட‌ன் ஒரு  வெ‌ங்காய‌த்தையு‌ம் போ‌ட்டு அரை‌த்து ‌விழுதாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெ‌ங்காய‌ விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

* பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவு‌ம்.

* கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு நெத்திலி மீனை போட்டு இறக்கவும்.

* குழ‌ம்‌பி‌ல் ‌மீனை போ‌ட்ட ‌பிறகு கர‌ண்டியை வை‌த்து ‌வேகமாக‌க் கிள‌‌ற‌க் கூடாது.

* சுவையான நெத்திலி மீன் குழம்பு தயா‌ர்.

Leave a Reply