90வது திருமண நாளை கொண்டாடிய உலகின் மிகவயதான தம்பதி.
உலகின் மிக வயதான தம்பதி என்ற பெருமையை பெற்ற ஜோடி நேற்று தங்களது 90வது திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Bradford என்ற நகரில் வாழும் தம்பதிகளின் கூட்டுத்தொகை வயது 213. அதாவது கணவர் கரம்சந்த் வயது 110 மற்றும் மனைவி கட்டாரி சந்த் வயது 103. இந்தியாவை சேர்ந்த இந்த தம்பதிகள் தங்கள் இளவயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தனர். கடந்த மாதம் உலகின் மிக வயதான தம்பதி என்று இவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த தம்பதிகள் கடந்த 1925ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நேற்று இவர்களது 90வது திருமண நாள். இங்கிலாந்தில் உள்ள தங்கள் வீட்டில் இந்த தம்பதிகள் தனது குடும்பத்தாருடன் உற்சாகமாக திருமண நாளை கொண்டாடினார்கள்.
இந்த தம்பதிக்கு 8 குழந்தைகளும் 27 பேரன்களும், 23 பேரன்களின் குழந்தைகளும் உள்ளனர். தற்போது இந்த தம்பதிகள் தங்கள் இளையமகன் பால் மற்றும் அவருடைய மனைவியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
English Summary:World`s oldest married couple celebrate their 90th wedding anniversary