ஒரே நாளில் சென்சார் ஆன தனுஷ் குடும்பத்தின் இரண்டு படங்கள்
தமிழகத்தில் வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது போன்று திரைத்துறையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது ஒருசில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேற்று தனுஷ் குடும்பத்தின் இரண்டு படங்கள் ஒரேநாளில் சென்சார் ஆகியுள்ளது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த ‘தங்கமகன்’ திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு அதற்கு ‘யூ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ திரைப்படமும் நேற்று சென்சார் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் இயக்குனரின் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.