பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன். இங்கல்ல…மத்தியபிரதேசத்தில்

பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன். இங்கல்ல…மத்தியபிரதேசத்தில்
smartphone
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுப்பது போன்று மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்பொது சிவ்ராஜ் செளஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பாஜக, மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் அளிப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்தவிட்டபோது தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் நேற்று மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்த மாநில உயர்கல்வித் துறை இணையமைச்சர் தீபக் ஜோஷி, ‘‘மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’கள் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ளன. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெண்டர் விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் அவை சரிசெய்யப்பட்டு மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’கள் வழங்கப்படும்’’ என்று கூறினார்.

இதன்படி 75 சதவீத வருகைப்பதிவு கொண்ட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாக, மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: MP government set to provide smartphones to college students

Leave a Reply