பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர் சித்து? அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர் சித்து? அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
siddhu
டெல்லியில் இரண்டு தேசிய கட்சிகளை வென்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது பிற மாநிலங்களிலும் தனது கட்சியை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். முதலில் அவர் குறி வைத்துள்ளது பஞ்சாப் மாநிலத்தை என்று கூறப்படுகிறது.

பாஜகவின் மாநிலங்களவை எம்.பியாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, தற்போது பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சித்துவை ஆம் ஆத்மி கட்சிக்குள் இழுக்க அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

சித்துவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பதவி அளிக்கப்படுவதோடு, வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்படும் என்று என பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சித்து விரைவில் முடிவெடுப்பார் என கருதப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபில் மட்டும் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதனால், அங்கு பாஜக கூட்டணியுடன் ஆளும் சிரோன்மணி அகாலி தளம் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியும் செல்வாக்கு பெற்று வருகிறது. வரும் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-அகாலி தளம் கூட்டணி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மும்முனைப் போட்டி நிலவ உள்ளது.

English Summary: Navjot Kaur Sidhu will be announced CM candidate for AAP?

Leave a Reply