முதல்வர் அலுவலகம், தலைமை செயலகத்தில் சிபிஐ திடீர் சோதனை. பெரும் பரபரப்பு

முதல்வர் அலுவலகம், தலைமை செயலகத்தில் சிபிஐ திடீர் சோதனை. பெரும் பரபரப்பு
cbi
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாநில தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு முதல்வர் அலுவலகத்திலும் ஒரு மாநிலத்தின் தலைமைசெயலகத்திலும் சோதனை நடத்துவது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளையும் மண்ணைக் கவ்வ செய்து தனிப்பெரும்பான்மையாக அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.  முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டது. மேலும் அதிகாரப்பகீர்வு குறித்து முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி மாநில அரசின் தலைமைச் செயலகத்திலும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்திலும் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முதல்வர் கெஜ்ரிவால், தன்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடியின் கோழைத்தனமான செயல் இது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

English Summary: CBI lying. My own office raided. Files of CM office are being looked into. Let Modi say which file he wants? said Aravind Kejriwal

Leave a Reply