சென்னை அண்ணா சாலையில் தோன்றிய 7 அடி ஆழ திடீர் பள்ளம். பெரும் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் தோன்றிய 7 அடி ஆழ திடீர் பள்ளம். பெரும் பரபரப்பு
groove
சென்னையின் முதுகெலும்பு என்று கூறப்படும் அண்ணா சாலையில் திடீரென 7 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி அலுவலகம், அரசு அலுவகங்கங்கள் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் அமைந்துள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வரும் முக்கிய பகுதி ஆகும். இந்நிலையில் இன்று காலை திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள பகுதியில்,  விஜயராகவா சாலை சந்திப்பில் திடீரென 7 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியுள்ளது.  இந்த பள்ளத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே  காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளத்தை மணல் கொண்டு மூடியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் மெட்ரோ பணியின்போது கன இயந்திரங்களை பயன்படுத்தியதுமே இந்த திடீர் பள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது

Leave a Reply