மோடி ஒரு கோழை. சிபிஐ சோதனையால் ஆவேசமான அரவிந்த் கெஜ்ரிவால்

மோடி ஒரு கோழை. சிபிஐ சோதனையால் ஆவேசமான அரவிந்த் கெஜ்ரிவால்
aravind kejriwal
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்திலும் தலைமை செயலகத்திலும் தலைமைச் செயலரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இன்று சிபிஐ சோதனை நடத்தியது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் மிகவும் காரசாரமாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கும் இடையே அதிகார பகிர்வு குறித்து பனிப்போர் நடந்து வரும் நிலையில் இந்த சிபிஐ சோதனை இருதரப்பினர்களின் மோதலை அதிகரித்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதல்வரின் அலுவலகமும், தலைமை செயலகமும், தலைமை செயலரின் வீடும் சிபிஐ சோதனைக்குட்படுவது இதுவே முதல்முறை. இந்நிலையில் இந்த சோதனை குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அரவிந்த கெஜ்ரிவால்: அரசியல் ரீதியாக பிரதமர் மோடி என்னை எதிர்கொள்ள முடியாததால் இந்த கோழைத்தனமான நடவடிக்கையில் மோடி ஈடுபட்டுள்ளார். மோடி ஒரு கோழை மற்றும் மனநோயாளி”. தனது அலுவலக கோப்புகள் சிபிஐ அதிகாரிகளால் பார்வையிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரி ராஜேந்தர் அலுவலகத்தைதான் சோதனையிட்டோம் என்று கூறுவது சால்ஜாப்பு.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி: டெல்லி முதல்வர் அலுவலகம் சிபிஐ-யால் சீலிடப்பட்டதும், முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதும் இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஓ பெரியன்: “இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்”

மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி: ” இது சரியான செயல் அல்ல”

மார்க்சிச்ட் கம்யூனிஸ்ட் கட்சி:  “இந்த சோதனை நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளின் உரிமைகள் மற்றும் கவுரவத்தை ஆக்கிரமிக்கும் மோடி அரசின் மேலும் ஒரு தரம் தாழ்ந்த நடவடிக்கை”

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பாஜக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதுல்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படவில்லை. இந்த சோதனை நடவடிக்கை கெஜ்ரிவாலுக்கோ அல்லது அவரது ஆட்சி நிர்வாகத்திற்கோ தொடர்புடையதல்ல. டெல்லி அரசில் உள்ள மற்றும் டெல்லி முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு எதிரான ஊழல் புகார் தொடர்பாக 14 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதுவும் கெஜ்ரிவால் அலுவலகத்தில் அந்த அதிகாரி சேருவதற்கு முன் செய்ததாக கூறப்படும் குற்றம் தொடர்பாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என ஜெட்லி மேலும் கூறினார்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு: “எதற்கெடுத்தாலும் பிரதமரை குற்றம் சாட்டுவது ஃபேஷனாகிவிட்டது. சிபிஐ ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு”

பா.ஜனதா எம்.பி. விஜேந்தர் குப்தா: கெஜ்ரிவால் பிரதமருக்கு எதிராக அறுவெறுப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு.

English Summary: PM Modi is a coward said Aravind Kejriwal

Leave a Reply