பத்து ஆண்டு போராட்டம் வெற்றி. அமெரிக்க ராணுவத்தில் உள்ள சீக்கியர்கள் தலைப்பாகை வைக்க அனுமதி

பத்து ஆண்டு போராட்டம் வெற்றி. அமெரிக்க ராணுவத்தில் உள்ள சீக்கியர்கள் தலைப்பாகை வைக்க அனுமதி
sikh
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் சீக்கிய வீரர் கேப்டன் சிம்ரத்பால் சிங் என்பவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவத்தில் சேரும்போது அவருடைய தலைப்பாகையை அகற்ற ராணுவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் தனது சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை மற்றும் தாடியை எடுக்க அவர் மறுத்துவிட்டார். இந்த இரண்டிற்கும் தனக்கு அனுமதி வேண்டும் என ராணுவ தளபதிக்கு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பரிசீலனையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கேப்டன் சிம்ரத்பால் சிங் ஆப்கானிஸ்தான் சென்ற அமெரிக்க ராணுவ குழுவிற்கு தலைமை தாங்கி அங்கு ரோட்டோரங்களில் வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவரது சிறப்பான பணியை பாராட்டிய அமெரிக்க ராணுவம் அவருக்கு வெண்கல நட்சத்திர பதக்கம் அளித்து கெளரவித்தது. மேலும் இவர் தற்காலிகமாக சீக்கிய மத அடையாளமாக தாடி வளர்க்கவும், தலைப்பாகை அணியவும் அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரே மாத்தில் இதுகுறித்து பரிசீலித்து அவர் நிரந்தரமாக தலைப்பாகை அணியவும், தாடி வளர்க்கவும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீக்கிய வீரரின் பத்து ஆண்டு போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

English Summary: Sikh soldier in U.S. army allowed to keep beard, wear turban

Leave a Reply