ஏகாதேசி விரதத்தின்போது என்னென்ன செய்ய வேண்டும்?

ஏகாதேசி விரதத்தின்போது என்னென்ன செய்ய வேண்டும்?

ekadesi1. ஏகாதசி விரதத்தை தசமியில் தொடங்கி அன்று இரவு, ஏகாதசி முழு தினமும், துவாதசி மாலையில் ஆக நான்கு வேளைகளுக்கு உணவு உண்ணாமல் இருக்க வேண்டும்.

2.தசமியில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். பெண் போகம் கூடாது. தனியே சுத்தமான தரையில் படுக்க வேண்டும்.

3. இந்த உபவாச தினத்தின் போது, உடலில் நெல்லிப் பருப்பை அரைத்துப் பூசிக் கொண்டு, நதியில் நீராட வேண்டும்.

4. ஹரியை நினைத்தபடி பஜனை, பூஜையில் ஈடுபட வேண்டும்.

5. ஏகாதசி இரவு உயர்ந்த ஆடைகளால் திருமாலை அலங்கரித்து, கந்த புஷ்பங்களை சாத்த வேண்டும். பின்னர் தூப தீபம் காட்டி, 108 தீபங்கள் ஏற்ற வேண்டும்.

6. பசு நெய்யும், சர்க்கரையும் கலந்த பாயாசமும், பலவித கனிகளும், கற்பூரம், சாபத்திரி, ஜாதிக்காய், லவங்கம் போன்றவை சேர்ந்த அடைக்காயமுது செய்து இறைவனுக்கு படைக்க வேண்டும்.

7.மறுநாள் துவாதசி அன்றும் காலைக் கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும். விருந்தினருக்கு உணவு அளிக்க வேண்டும்.

8. அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.

இந்த வழியில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கும் என்பது ஐதீகம். இதனை எடுத்துக்கூறும் வகையில்தான், வைணவ தலங்களில் ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு என்ற விழாவை பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.

Leave a Reply