ஆயுள் அதை வேண்டி தான் மனிதன் கடவுளிடமும், கடவுளாக கருதப்படும் மருத்துவர்களிடமும் ஓடி, ஓடி செல்கிறான். நல்ல ஆயுள் வேண்டுமானால் உடல் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக தான் இப்போது மக்கள் நல்லது என்றால் அதை எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்ற அளவின்றி உட்கொண்டு வருகிறார்கள்.
சமீப காலமாக வெளியிடங்கள் எங்கு சென்றாலும் கிரீன் டீ தரும் வழக்கம் அதிகமாகி வருகிறது. கேட்டால் இது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எல்லாரும் கூறுகிறார்கள். ஆம், கிரீன் டீ நல்லது தான். ஆனால், அளவுக்கு மீறி அடிக்கடி கிரீன் டீ குடிக்க ஆரம்பித்தால், இனப்பெருக்கத்திற்கு இடையூறாக அமையும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது…..
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
இர்வின் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் அடிக்கடி கிரீன் டீ பருகுவது இனப்பெருக்க பாகத்தை மோசமான வகையில் பாதிக்கிறது என கண்டறிந்துள்ளனர்.
ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ்
கிரீன் டீயில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலுக்கு நல்லது என நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால், இப்போது அது தான் உடலுக்கு மோசமான அளவில் தீய தாக்கம் ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஊட்டச்சத்து மருந்துகள் (nutraceuticals)
கிரீன் டீ மட்டுமின்றி அதிகப்படியான அளவில் (Hish Dose) ஆரோக்கியமளிக்கும் எந்த பொருட்களையும் (இயற்கை பொருட்கள் உட்பட) அதிகம் உட்கொள்ள வேண்டாம் என ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
பேராசிரியை மஹ்தஃப்
இதுக்குறித்து பேராசிரியை மஹ்தஃப், “கிரீன் டீயில் அதிக ஆரோக்கிய நலன்கள் இருக்கத்தான் செய்கிறது. இது Low Dose என்ற போதிலும் கூட அடிக்கடி உட்கொள்ளும் போது உடலில் பாதகமான மாற்றங்களை உருவாக்குகிறது” என கூறியுள்ளார்.
குறைந்த அளவு
கிரீன் டீ உடலுக்கு நல்லது தான், ஆனால், குறைவாக பருகும் போது மட்டுமே என அவர் மேலும் கூறியுள்ளார். அதிகப்படியான கிரீன் டீயால் உடலில் சேரும் நச்சுக்கள் இனப்பெருக்க பாகத்திற்கு அபாயமாக அமைகிறது.
புழுக்கள்
உடலில் 10 மில்லி கிராமுக்கு அதிகமாக கிரீன் டீ மூலப்பொருள் சேரும் போது, புழுக்கை மெல்ல, மெல்ல வெளிப்பட ஆரம்பிக்கிறது. மேலும் அடிக்கடி கிரீன் டீ பருகுவதால் இனப்பெருக்க பாகத்தில் உருவ குறைபாடு மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.
உடல் செல்கள் மரணம்
மேலும் அதிகப்படியாக கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள செல்கள் மரணமடைய வாய்ப்புகள் உண்டு என பேராசிரியர் மஹ்தஃப் கூறியிருக்கிறார்.
பயன்கள்
உலக மக்கள் மத்தியில் கிரீன் டீ ஆனது, மூளை மற்றும் இதய நலன், உடல் எடை குறைக்க என பலவற்றுக்கு பலனளிக்கிறது என்ற பிம்பம் உருவாகயுள்ளது. இது பகுதி சதவீதம் உண்மை எனிலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.