அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர் ஆக முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்த தீர்ப்பில் ஆகம விதிகளுக்குட்பட்டு, இந்து கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீகோர்ட், தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும் ஆகம விதிகளை கடைப்பிடித்தே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
English Summary: supreme court judgement about right to perform Pooja in temple