கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2 துறையினர் அதிரடி சோதனை
நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அலுவலகத்திலும், தலைமைச்செயலர் அலுவலகத்திலும் சிபிஐ ரெய்டு செய்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் ஆகிய இரண்டு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் புகுந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திக் சிதம்பரம் உடன் இருந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தற்போது தொடர்ந்து அதிகாரிகள், கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டனர்.
English Summary: Enforcement and Income Tax officers raid at Karthick Chidambaram office