ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் இருமுடியில் சுத்தமான நெய்யை தேங்காயில் அடைத்து செல்கிறார்கள். ஐயப்பன் சிவவிஷ்ணுவின் ஐக்கியம். தேங்காய் தென்னை மரத்தின் கனி. தென்னை கற்பகத்தருவின் அம்சமாகும். கற்பகத்தரு ஈசுவரனால் படைக்கப்பட்ட சிவனின் அம்சமாகும். அதனாலேயே தேங்காயிற்கு மூன்று கண்கள் உள்ளது.
தேங்காயில் அடைக்கும் நெய் பாலில் இருந்து கிடைக்கிறது. பால் காமதேனுவின் அம்சமான பசுவில் இருந்து கிடைக்கிறது. காமதேனு மகாலட்சுமி வாசம் செய்யும் மகாவிஷ்ணுவின் அம்சமாகும். ஆக சிவன் அம்சமாகிய தேங்காயில் விஷ்ணு அம்சமாகிய நெய்யை நிரப்புகிறோம். எனவே சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் சேர்ந்த முத்திரைக்காய் கொண்டு செல்கிறோம்.