சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு தியானம்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு தியானம்.
TM12
சென்னை, தண்டையார்பேட்டையில் – பிரம்மா குமாரிகள் நடத்தும் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு தியானம், மருத்துவ முகாம் ஆகியவை டிசம்பர் 17 முதல் டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது.

மனித குலம் அனைத்திற்கும் மேலான சக்தி பொருந்திய இறைவன்-கடவுள் ஒருவர் என்று அனைத்து மதங்களும் ஒருசேர இணக்கமாய் வருவது ஒரே ஒரு கருத்தில் தான். அதாவது, இறைவன் ஒளிமயமானவர் என்பது. அவ்வாறு ஒளியாய், ஜோதியாய் விளங்கும் பரம்பொருள் இறைவனை அன்புடன் நினைப்பது தியானிப்பது அல்லது பூஜை செய்வது வணங்குவது என்பது எல்லா மனிதர்களுக்கும் கடினமாய் தென்பட்டது.

ஆகவே அந்த ஒளியை பெரிய உருவில் எளிதாய் வழிபட லிங்க உருவாய்க் கண்டு பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய ஸ்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு அளவுகளில், பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

அத்தலங்கள் பின்வருமாறு:

1. சோமநாத் 2. விஷ்வநாத் 3. திரியம்பகேஷ்வரர் 4. ஓம்காரேஷ்வர் 5. மகாகாலேஷ்வரர் 6. நாகேஷ்வரர் 7. வைத்யநாத் 8. கிருஷ்ணேஷ்வர் 9. பீமா சங்கர் 10. கேதார்நாத் 11. மல்லிகார்ஜூன் 12. இராமேஷ்வர்

முழு முதற் கடவுளாம் சிவனை, ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் இறைவன்பால் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜயோக தியானம் எனப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்) ஜோதி சொரூபமாய் விளங்குபவர், அந்த உலக சிருஷ்டியின் கர்த்தா (படைப்பவர்) அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே படைக்கப்படும்.

இம்மாபெரும் உண்மையை எளியமுறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மா குமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க

தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர தேசத்திலும் பல முக்கிய நகரங்களில் சுமார் 112 இடங்களில் இத்தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இத்தரிசனத்தைக் கண்டு பயனடைந்துள்ளனர்.

இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜேதிர் லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத அனுபவமும் கிடைக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு தியானம் தினமும் காலை 10.00 – 10.30 மற்றும் மாலை 6.00 – 6.30 மணி வரை நடைபெறும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தங்கம் மாளிகையில் டிசம்பர் 17 முதல் 21 வரை காலை 8.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை நடைபெறும் இந்த தரிசணத்துக்கு அனுமதி இலவசம்.

Leave a Reply