ஆனந்தவிகடன் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
பிரபல தமிழ் வார இதழான ஆனந்தவிகடன் மீது புதிய அவதூறு வழக்கு ஒன்றை தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, “கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளியான ஆனந்தவிகடன் இதழில் மந்திரி தந்திரி என்ற கட்டுரையில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஆனந்தவிகடன் மீது ஏற்கனவே இதே மந்திரி தந்திரி கட்டுரையில் தமிழக முதல்வர் உள்பட ஒருசில அமைச்சர்கள் குறித்த கட்டுரைகளுக்கு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: One more defamation case against Anandha vikadan