எந்திரன் 2 படத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் – டுவிட்டர் பக்கங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘எந்திரன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘எந்திரன் 2’ படத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் @2Point0movie என்ற பெயரில் https://twitter.com/2Point0movie என்ற லிங்கில் செயல்படுகிறது. அதேபோல் இந்த படத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/2Point0movie என்ற லிங்கில் செயல்படுகிறது.
மேற்கண்ட இரண்டு சமூக வலைத்தளங்களிலும் வரும் நாட்களில் எந்திரன் 2′ படம் குறித்த தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவை தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த இரு சமூக வலைத்தளங்களுக்கும் ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.